செவ்வாய், 3 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Caston
Last Modified: சனி, 8 ஜூலை 2017 (15:28 IST)

பாத்ரூமில் ஓவியாவும் ஆரவ்வும்: கட்டிப்பிடித்து அடித்த கூத்து!

பாத்ரூமில் ஓவியாவும் ஆரவ்வும்: கட்டிப்பிடித்து அடித்த கூத்து!

கமல் ஹாஸன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த பிக் பாஸ் வீட்டில் 13 பிரபலங்கள் தற்போது தங்கியுள்ளனர். பிக் பாஸ் வீட்டில் நடக்கும் சம்பவங்களை எல்லாம் பார்த்து மக்கள் செம கடுப்பில் உள்ளனர்.


 
 
ஏற்கனவே பிக் பாஸ் வீட்டில் உள்ள நடிகை ஓவியாவும், நடிகர் ஆரவ்வும் காதலிப்பதாக செய்திகள் வருகின்றன. இதற்கு முன்னர் தன்னிடம் வந்து லவ் சொல்லு, நாம காதலிக்கலாம் என நடிகை ஓவியா ஆரவிடம் கூறியிருந்தார். இதனையடுத்து இவர்கள் இருவருக்கும் இடையே சிறிது நெருக்கம் ஏற்பட்டது.
 
விஜய் டிவி கூட மலர்ந்த புதிய காதல் என இவர்கள் இருவரும் பேசுவதை வைத்து புரோமோ வெளியிட்டது. இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் உள்ள பாத்ரூமில் இவர்கள் இருவரும் கட்டிப்பிடித்து ஆட்டம் போடும் வீடியோ வெளியாகியுள்ளது.