வலிமை தயாரிப்பாளருக்கு கொக்கி போடும் ஓடிடி நிறுவனங்கள்!
வலிமை திரைப்படம் ஜனவரி 13 ஆம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளது.
இந்த ஆண்டு தொடக்கத்தில் தமிழ் சினிமாவில் வெளியாகவுள்ள மிகப்பெரிய படமாக வலிமை உள்ளது. இந்த படத்தை பெரும் விலை கொடுத்து விநியோகஸ்தர்கள் வாங்கி உள்ளனர். இந்நிலையில் ஒமிக்ரான் வைரஸ் பரவலால் தமிழக அரசு ஜனவரி 10 வரை திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகள் மட்டுமே அனுமதி என அறிவித்துள்ளது. ஆனாலும் வலிமை சொன்ன தேதியில் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
இந்நிலையில் கொரோனா பரவல் மேலும் அதிகமாகி திரையரங்குகளுக்கு மேலும் கட்டுப்பாடுகளோ அல்லது முழுவதும் மூடப்படுமோ என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. அப்படி ஏதேனும் நடக்கும் பட்சத்தில் வலிமை ரிலிஸ் ஆகாமல் போக வாய்ப்புகள் உள்ளது. அப்படி ஏதாவது நடந்தால் வலிமை எப்படியாவது கைப்பற்றி நேரடி ஓடிடி ரிலிஸ் செய்ய வேண்டும் என முன்னணி ஓடிடி நிறுவனங்கள் வலிமை தயாரிப்பாளரை அனுகி பேசிவருவதாக சொல்லப்படுகிறது.