புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 26 பிப்ரவரி 2021 (18:01 IST)

ஆஸ்கார் இனித் தொலைவிலில்லை ....கவிஞர் வைரமுத்து டுவீட்

விரைக தமிழர்களே இனித் தொலைவிலில்லை ஆஸ்கார் எனக் கவிப்பேரரசு வைரமுத்து தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் கடந்தாண்டு விஜய் சேதுபதி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஸ் நடிப்பில் வெளியான படம் க/பெ ரணசிங்கம். இப்படத்தை விருமாண்டி என்பவர் இயக்கியிருந்தார்.
இப்படத்தில் கவிஞர் வைரமுத்து எழுதிய பாடல்கள் பெரும் வரவேற்பை பெற்றன. இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்திருந்தார்.

இந்நிலையில் தமிழக அரசு நடிகை ஐஸ்வர்யா ராஜேஷுக்கு கலைமாமணி விருது வழங்கி கவுரவித்த நிலையில் தற்போது, சென்னை சர்வதேசத் திரைப்படவிழாவில் விஜய் தேதுபதியுடன் க/பெ ரணசிங்கம் படத்தில் அவர் தனது சிறப்பாக நடித்ததற்காக அவருக்கு சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டுள்ளது. இதனால் படக்குழு மகிழ்ச்சி அடைந்துள்ளது.

இதே விழாவில் , க/பெ ரணசிங்கம் சீயான்கள், என்றாவது ஒருநாள்’ போன்ற படங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வைரமுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது :

'என்றாவது ஒருநாள்’, ‘க/பெ ரணசிங்கம்’,

'சீயான்கள்’ - ஆகிய திரைப்படங்கள்
சர்வதேச விருது கொண்டது
பெருமிதம் தருகிறது.

முதலிரு படங்களுக்கு
நான் பாட்டெழுதிப் பங்கு செலுத்தியது
பரவசம் தருகிறது.

விரைக தமிழர்களே!இனி
அதிகத் தொலைவில்லை ஆஸ்கார்.n #18thChennaiInternationalFilmFestival எனத் தெரிவித்துள்ளார்.