'தமிழிலும் வெளியாகிறது கண் சிமிட்டி நாயகியின் 'ஒரு ஆதார் லவ்'

Last Modified சனி, 26 ஜனவரி 2019 (21:19 IST)
மலையாளத்தில் உருவான 'ஒரு ஆதார் லவ்' என்ற திரைப்படம் ஒரே நாளில் இந்திய அளவில் டிரெண்ட் ஆனது. கடந்த ஆண்டு இந்த படத்தின் டீசர் வெளியானபோது, அதில் நாயகி பிரியாவாரியரின் ஒரே ஒரு கண்சிமிட்டல் இந்திய இளைஞர்களை வெகுவாக கவர்ந்தது
இந்த ஒரே ஒரு டீசரால் இந்தியாவின் முன்னணி நடிகைகளை பின்னுக்கு தள்ளிவிட்டு பல நாட்களாக டிரண்டில் முதலிடத்தில் இருந்தார் பிரியாவாரியர். அதுமட்டுமின்றி 'ஒரு ஆதார் லவ்' படத்தை பல மொழிகளில் ரீமேக் செய்யவும் டப் செய்யவும் போட்டி ஏற்பட்டது.

இந்த நிலையில் 'ஒரு ஆதார் லவ்' படம் தமிழிலும் தற்போது டப் செய்யப்பட்டுள்ளது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் பிரியாவாரியர் உள்பட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். இந்த படத்தை தமிழில் கலைப்புலி எஸ்.தாணுவின் வி கிரியேஷன்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது.இதில் மேலும் படிக்கவும் :