சூப்பர் ஸ்டாருக்கு எதிர்ப்பு
தெலுங்கு சினிமாவில் சூப்பர் மகேஷ்பாபு. இவர் ஒரு விளம்பர படத்தில் நடித்துள்ளதற்கு எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர் மகேஷ்பாபு ஒரு புகையிலை விளம்பரப் படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்வெளியானது.
ஏற்கனவே புகையிலை விளம்பரத்திற்கு தடை உள்ள நிலையில் புகையிலை விளம்பரத்தில் நடிக்கவில்லை எனவும், அந்த நிறுவனத்தில் வேறு ஒரு பொருளை விளம்பரப்படுத்தும் படத்தில்தான் அவர் நடிக்கவுள்ளதாகவும் தெரிகிறது.
இதற்கு பலத்த எதிர்ப்புகள் வலுத்து வருகிறது.
ரஜினி உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் விளம்பரங்களில் நடிப்பதில்லை எனக் கூறினார். அதேபோல் சில நடிகர்கள் விளம்பரங்களில் நடிப்பதில்லை. இந்நிலையில் இந்த விளம்பரத்திற்கு விமர்சனம் எழுந்துள்ள நிலையில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிப்பாரா மாட்டா எனக்கேள்வி எழுந்துள்ளது.