ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: புதன், 26 ஜூலை 2017 (13:48 IST)

பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களின் ஒருநாள் சம்பளம்; வைரலாகும் செய்தி!

பிரபல தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சி மக்களின் ஆதரவை பெற்று விறுவிறுப்பாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது. நடிகர்  கமல் தொகுத்து வழங்குகிறார். 15 சினிமா பிரபலங்களை வைத்து ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில், ஜூலி மட்டும் சினிமா  துறையை சாராதாவர்.

 
இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள போட்டியாளர்களின் வாழ்க்கையையே புரட்டி போட்டுள்ளது. முக்கியமாக  நடிகை ஓவியாவிற்கு ரசிகர்கள் நாளுக்கு நாள் பெருகி கொண்டே வருகிறது. மக்களின் ஆதரவை பெற்று சுமார் 2 கோடிக்கும்  மேற்பட்ட ஓட்டுகளை வாங்கினார்.
 
பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெற்று பெறுபவர்களுக்கு பரிசுத்தொகை எவ்வளவு என்பது தெரியாத நிலையில், நிகழ்ச்சியின்போது  ஜூலியும், காயத்ரியும் 50 லட்சம் என்று அவர்கள் வாயாலேயே கூறினர். ஆனால் தற்போது பிக் பாஸில் முதல் பரிசு எவ்வளவு  என்ற சீக்ரெட் தெரிய வந்துள்ளது. அதாவது பிக் பாஸ் வீட்டில் இருக்கும் ஒவ்வொரு நாளும் தலா 2 லட்சம், ஒவ்வொரு போட்டியாளருக்கும் தருவார்கள். மேலும் விஜய் டிவியின் சார்பில் ரூபாய் 50 லட்சம் தரப்படும் என்றும் கூறப்படுகிறது. இந்த  செய்தி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.