வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : சனி, 6 ஏப்ரல் 2019 (15:18 IST)

அப்போ விஜய்யின் தங்கை இப்போ ரஜினியின் மகளா! தலைவர்166-ல் இணைந்த நடிகை.!

தலைவர் 166 படத்தில் பிரபல இளம்  நடிகை நிவேதா தாமஸ் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
 
பேட்ட படத்தின் வெற்றியை தொடர்ந்து ரஜினிகாந்த் அடுத்ததாக ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் அரசியில் கலந்த மசாலா படத்தில் நடிக்கவிருக்கிறார். இது ரஜினியின் கேரியரில் 166 -வது படமாக உருவாகவிருக்கிறது. இப்படத்தை பற்றி எந்தவிதமான அதிகாரபூர்வ தகவல்களும் இன்னும் வெளிவரவில்லை இருந்தாலும் இப்படத்தை பற்றின அப்டேட்ஸ் வந்தவண்ணமாகவே உள்ளது.
 
இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகள் மும்பையில் நடைபெற உள்ளதாக ஏற்கனவே சில தகவல்கள் வெளியானது. மேலும், முதற்கட்ட படப்பிடிப்பு வரும் ஏப்ரல் 10ஆம் தேதி துவங்க உள்ளதால் சமீபத்தில் இப்படப்பிடிப்பிற்கான போட்டோ ஷுட்கள் நடைபெற்றதாகவும் அதில் ரஜினி கலந்து கொண்டதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. 
 
இப்படத்தில் ரஜினிக்கு  வில்லனாக எஸ்.ஜே சூர்யா நடிப்பதாக வந்த தகவலையடுத்து தற்போது இப்படத்தில் ரஜினியின் மகளாக நிவேதா தாமஸ் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  நிவேதா தாமஸ் ஏற்கனவே விஜய்க்கு தங்கையாக ஜில்லா படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.