1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Raj Kumar
Last Modified: வெள்ளி, 24 மே 2024 (20:45 IST)

தனி ஒருவன் 2 ப்ரோஜக்ட் கை விட்டு போயும் இயக்குனருக்கு ஹாப்பிதான்..! அஜித் தான் காரணம்!.

Ajithkumar
ஜெயம் ரவி நடிப்பில் 2015 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தனி ஒருவன். இந்த திரைப்படத்தை அவரது அண்ணன் மோகன் ராஜாதான் இயக்கியிருந்தார். வெளியான சமயத்தில் பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படமாக தனி ஒருவன் படம் இருந்தது.



நடிகர் அரவிந்த் சாமிக்கும் அந்த படம் நல்ல கம் பேக்காக இருந்தது. இந்த நிலையில் மீண்டும் தனி ஒருவன் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குவதற்கு தயாரானார் மோகன் ராஜா. இதற்கான அறிவிப்பு வீடியோ எல்லாம் வெளிவந்தது.

ஆனால் சில காரணங்களால் அந்த படம் இப்போது இயக்கப்படவில்லை என கூறப்படுகிறது. ஆனால் இவ்வளவு பெரிய ப்ரோஜக்ட் போனதற்காக இயக்குனர் மோகன் ராஜா வருத்தப்படவில்லை. ஏனெனில் அவருக்கு வேறு இரண்டு படங்களில் வாய்ப்புகள் கிடைத்துள்ளன.

Mohan Raja


நடிகர் சிரஞ்சீவி மோகன் ராஜா இயக்கத்தில் ஒரு தெலுங்கு படத்தில் நடிப்பதற்கு விருப்பம் தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது. அதே போல நடிகர் அஜித்தும் அவர் அடுத்து நடிக்கும் திரைப்படத்தை மோகன் ராஜா இயக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளதாக பேச்சுக்கள் இருக்கின்றன.

இந்த திரைப்படங்களில் அஜித் படத்தில் இவர் கமிட் ஆகும் பட்சத்தில் இயக்குனர் மோகன் ராஜாவிற்கு தமிழில் அது ஒரு கம் பேக்காக இருக்கும். ஏனெனில் 2017 இல் வந்த வேலைக்காரன் திரைப்படத்திற்கு பிறகு அவரது இயக்கத்தில் தமிழில் திரைப்படங்களே வரவில்லை.