நியூயார்க் பயங்கரவாத தாக்குதல்; உயிர் தப்பிய பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா
அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் உள்ள உலக வர்த்தக மையத்தின் அருகே உள்ள சைக்கில்கள் செல்லும் பாதையில் பயங்கரவாதி ஒருவர் வேன் மூலம் மோதி விபத்தை ஏற்படுத்தியதில் 8 பேர் பலியானதாகவும், 15 பேர் படுகாயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் நியூயார்க்கில் உலக வர்த்தக மையம் அருகே உள்ள லோயர் மன்ஹாட்டன் பகுதியில் பாதசாரிகள் செல்லும் ரோட்டில் டிரக் ஓட்டிவந்த மர்மநபர் தாக்குதல் நடத்தினார். துப்பாக்கியால் சுட்டும் நடத்தப்பட்ட தாக்குதலில் 8 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 15 பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்த தாக்குதல் நடைபெற்ற இடத்தில் இருந்து நான்கு வீடுகள் முன் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவின் வீடு இருக்கிறதாம்.
படப்பிடிப்பு முடிந்து வீடு திரும்பும் போது அதிக பயங்கர இருண்ட சைரன்கள் கேட்டதாகவும் அவர் ட்விட்டரில் பது செய்துள்ளார்.