மீண்டும் சினிமாவுக்குள் வரமாட்டேன்: 'ஒஸ்தி' நாயகி
ஒஸ்தி படத்தில் சிம்புக்கு ஜோடியாகவும், மயக்கம் என்ன படத்தில் தனுஷ்க்கு ஜோடியாகவும் நடித்து புகழ் பெற்றவர் ரிச்சா கங்கோபத்யாய். இவர் இரு தமிழ் படங்களை தவிர சில தெலுங்கு படங்களிலும் நடித்தார். அதன் பிறகு சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டு எம். பி. ஏ படிப்பதற்காக அமெரிக்கா சென்றுவிட்டார். இந்நிலையில் மீண்டும் சினிமாவுக்குள் வரமாட்டேன் என டுவிட்டரில் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: 'உங்களின் அடுத்த படம் எப்போது?" என்ற கேள்வியை எனக்கு 90 வயதானாலும் கேட்பார்கள் என்ற யதார்தத்தை ஏற்றுக்கொள்கிறேன் அதேசமயம், சினிமா பிரவேசம் என்பது என்னைப் பொருத்தவரை ஒரு குறுகிய கால வீச்சு. அதற்குள் மீண்டும் திரும்ப நான் விரும்பவில்லை, அந்த கட்டத்தை கடந்துவிட்டேன்" எனப் பதிவிட்டுள்ளார்.'