ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 6 ஆகஸ்ட் 2024 (08:04 IST)

இந்தியன் 2 ஓடிடி ரிலீஸுக்கு வந்த சிக்கல்… விலையைக் குறைத்த நெட்பிளிக்ஸ்!

கமல்ஹாசன் மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில்  எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரிலீஸான இந்தியன் 2 திரைப்படம் படுமோசமான விமர்சனங்களை சந்தித்துள்ளது. இதுவரை ஷங்கர் கேரியரில் இல்லாத அளவுக்கு மோசமான வசூலையும் பெற்று வருகிறது.

மோசமான விமர்சனங்களாலும், கேலிகளாலும் படத்தில் இருந்து 12 நிமிட நேரத்தைக் குறைத்தனர். ஆனால் அப்போதும் அந்த படம் ரசிகர்களை தியேட்டருக்குள் ஈர்க்கவில்லை. இந்நிலையில் இந்தியன் 3 மீது ரசிகர்களுக்கு இருந்த எதிர்பார்ப்பு அப்படியே படுத்துவிட்டது. இதனால் திட்டமிட்டதற்கு முன்பே இந்த படம் ஓடிடியில் ஆகஸ்ட் 9 ஆம் தேதி வெளியாகிறது.

இந்நிலையில் இந்த படத்தை ஓடிடியில் வெளியிடுவதில் இப்போது ஒரு புதிய சிக்கல் எழுந்துள்ளதாக சொல்லப்படுகிறது. நெட்பிளிக்ஸ் நிறுவனம் இந்த படத்தை 125 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியதாம். ஆனால் படம் வெளியான பிறகு படுமோசமான விமர்சனங்களைப் பெற்றது. இந்நிலையில் தயாரிப்பு நிறுவனம் ஓடிடிக்குக் கொடுக்க வேண்டிய பட வடிவத்தை சொன்ன தேதிக்குள் கொடுக்கவில்லையாம். அதனால் அதை குறிப்பிட்டு இப்போது 60 கோடி ரூபாய்தான் தருவோம் என சொல்லி வருகிறதாம். இதனால் லைகா நிறுவனம் என்ன முடிவெடுக்கப் போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.