நெட்பிளிக்ஸில் ஆடியோ ஒன்லி – புதிய அறிவிப்பு வெளியீடு!
நெட்பிளிக்ஸ் நிறுவனம் தனது பயணர்களுக்காக ஆடியோ ஒன்லி வசதியை அறிவித்துள்ளது.
கொரோனாவால் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அனைத்து நாடுகளும் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் உலகின் பெரும்பகுதி மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். அவர்களுக்கு பொழுதுபோக்காக நெட்பிளிக்ஸ் மற்றும் அமேசான் ப்ரைம் போன்ற ஸ்ட்ரீமிங்க் தளங்கள் இருந்து வருகின்றன. உலக அளவில் முன்னணி ஓடிடி நிறுவனமாக நெட்பிளிக்ஸ் இருந்து வருகிறது.
இந்நிலையில் இந்தியாவில் மேலும் வாடிக்கையாளர்களைக் கவரும் விதமாக வார இறுதி நாளில் இலவசமாக தங்கள் சேவையை வழங்க உள்ளதாக சில நாட்களுக்கு முன்னர் அறிவித்தது. இதையடுத்து இப்போது வாடிக்கையாளர்களுக்காக ஆடியோ ஒன்லி வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் நிகழ்ச்சிகளின் ஆடியோவை மட்டும் கேட்டுக்கொள்ளலாம்.