செவ்வாய், 3 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 9 டிசம்பர் 2020 (11:21 IST)

டெனட் படத்தில் பணியாற்றியுள்ள ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா!

தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் பணியாற்றிவரும் முன்னணி ஒளிப்பதிவாளரான நீரவ் ஷா டெனட் படத்தின் உருவாக்கத்தில் பணியாற்றியுள்ளார்.

தமிழில் பில்லா, தலைவா, ஓரம்போ, 2.0  மற்றும் நேர்கொண்ட பார்வை ஆகிய படங்களில் பணியாற்றி பாராட்டுகளைப் பெற்றவர் ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா. இவர் தற்போது ஹாலிவுட்டில் உருவாகி வெளியாகியுள்ள டெனட் படத்தின் இந்தியா சம்மந்தப்பட்ட காட்சிகளில் கூடுதல் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

கடந்த 4 ஆம் தேதி இந்தியாவில் டெனட் திரைப்படம் வெளியான நிலையில் அதில் டைட்டில் கிரடிட்டில் கூடுதல் ஒளிப்பதிவுக் குழுவில் நீரவ் ஷா பெயரும் இடம்பெற்றுள்ளது.