அஜித் படத்தில் இருந்து விலகிய நஸ்ரியா...?
விஸ்வாசம் படத்தின் வெற்றியை தொடர்ந்து அஜித் நடிக்கவுள்ள அடுத்த படம் பிங்க் படத்தின் ரீமேக். இந்த படத்தை போனிகபூர் தயாரிக்க எச்.வினோத் இயக்கவுள்ளார்.
இந்நிலையில் இந்த படத்தில் அஜித்துடன் நஸ்ரியா, வித்யாபாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஆண்ட்ரியா தரியாங், அபிராமி வெங்கடாச்சலம், ரங்கராஜ் பாண்டே மற்றும் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடிக்கவுள்ளனர் என தகவல் வெளியாகியது.
அஜித் இதில் அமிதாப் பச்சன் கதாபாத்திரத்திலும், டாப்ஸி கதாபாத்திரத்தில் நஸ்ரியாவும் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியானது. ஆனால், தற்போது நஸ்ரியா மரியாதை கருதி இந்த படத்தில் இருந்து விலகியுள்ளார் என்ற செய்திகள் பரவி வருகிறது.
ஆம், நஸ்ரியா ஹோம்லியான கேரக்டரில் நடிப்பர் ஆனால் இந்த படத்தில் ஆண்களுடன் மிகவும் நெருக்கமான காட்சிகலில் நடிக்க வேண்டுமாம் எனவே அவர் படத்தில் இருந்து விலகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.