பத்திரிக்கையாளர்களை சந்தித்து நன்றி தெரிவித்த நயன்தாரா- விக்னேஷ் சிவன் தம்பதி
திருமணம் முடிந்துள்ள நிலையில் இன்று சென்னையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்து நன்றி தெரிவித்துள்ளனர்.
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் திருமணம் நேற்று முன் தினம் சென்னை அருகே மகாபலிபுரத்தில் சிறப்பாக நடைபெற்றது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இதையடுத்து நேற்று நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தம்பதியினர் திருப்பதி கோயிலுக்கு சென்று வழிபாடு செய்தனர். அது சம்மந்தமான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின.
இதையடுத்து இன்று பத்திரிக்கையாளர்களை சந்தித்து இருவரும் நன்றி தெரிவித்துள்ளனர். அப்போது பேசிய நயன்தாரா “நீங்கள் இவ்ளோ நாள் அளித்த ஆதரவு பெரிய விஷயம். திருமணத்துக்குப் பின்னரும் உங்கள் ஆதரவு வேண்டும். எல்லோருக்கும் நன்றி” என பேசியுள்ளார்.