வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 23 அக்டோபர் 2023 (08:01 IST)

ஷூட்டிங் வராமல் அலப்பறை செய்யும் நயன்தாரா… முழிக்கும் படக்குழு!

லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் நயன்தாரா திருமணத்துக்குப் பின்னர் நடித்த படங்கள் எதுவும் ஹிட்டாகவில்லை. இந்நிலையில் இப்போது புதிதாக மண்ணாங்கட்டி என்ற படத்தில் அவர் நடித்து வருகிறார்.  இந்த படத்தை சர்தார் உள்ளிட்ட படங்களை தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த படத்தில் நயன்தாராவோடு யோகி பாபு, தேவதர்ஷினி மற்றும் நரேந்திர பிரசாத் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.  இந்த படத்தை பிளாக்‌ஷீப் யுட்யூப் சேனலில் நிகழ்ச்சிகளை வழங்கிய ட்யூட் விக்கி இயக்கி வருகிறார்.

இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் கொடைக்கானல் அருகே ஒரு கிராமத்தில் உள்ள ஏலக்காய் தோட்டத்தில் எடுக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. ஆனால் தற்போது கொடைக்கானலுக்கு வரமுடியாது என சொல்லிவிடவே, அவருக்காக சென்னையில் ஏலக்காய் தோட்டம் போல செட் ஒன்றை போட்டு ஷூட் செய்ய உள்ளார்களாம். மற்ற நடிகர்கள் நடிக்கும் காட்சிகள் எல்லாம் கொடைக்கானலில் நிஜ ஏலக்காய் தோட்டத்தில் படமாக்கப்படும் என சொல்லப்படுகிறது.