நயன்தாராவின் அடுத்த ஹீரோ ஆர்ஜே பாலாஜியா?

nayanthara
Last Modified வியாழன், 7 நவம்பர் 2019 (20:17 IST)
நயன்தாரா நடித்த நானும் ரவுடிதான் மற்றும் வேலைக்காரன் ஆகிய படங்களில் காமெடி வேடங்களில் நடித்த நடிகர் பாலாஜி, தற்போது நயன்தாரா படத்தின் நாயகனாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது

ஆர்ஜே பாலாஜி நடித்த எல்.கே.ஜி’ திரைப்படம் சமீபத்தில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றியை பெற்றது இந்த படத்தின் பட்ஜெட்டை விட இந்த படம் 2 மடங்கு வசூல் செய்ததாகவும் அதனால் இந்த படத்தின் தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சி அடைந்திருப்பதாகவும், இதே மகிழ்ச்சியில் ஆர்ஜே பாலாஜி நடிக்கும் அடுத்த படத்தையும் தயாரிக்க முன்வந்துள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது
இந்த படத்திற்கு ’மூக்குத்தி அம்மன் என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும், டைட்டிலை பார்த்ததும் இதுவொரு பக்தி படம் என்று எண்ண வேண்டாம் என்றும் இந்த படமும் ஒரு சமூக கருத்தை அழுத்தமாக கூறும் திரைப்படம் என்றும் ஆர் ஜே பாலாஜி தரப்பிலிருந்து கூறப்பட்டுள்ளது

இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருக்கும் நிலையில் இந்த படத்தின் நாயகியாக நடிக்க லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவிடம் படக் குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்களாம். இந்த படத்தில் தன்னுடைய கேரக்டர் அழுத்தமாக இருந்தா; நயன்தாரா இந்த படத்தில் நடிக்க சம்மதித்து விடுவார் என்றும், அதுவும் டைட்டில் வேடம் என்பதால் நயன்தாரா நிச்சயம் மறுப்பு தெரிவிக்க மாட்டார் என்றும் படக்குழுவினர் நம்பிக்கையுடன் உள்ளனர்.இதில் மேலும் படிக்கவும் :