புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : சனி, 14 நவம்பர் 2020 (12:29 IST)

நயன்தாராவின் ’’மூக்குத்தி அம்மன்’’ திரைப்படம் டுவிட்டர் விமர்சனம்!

ஆர்.ஜே.பாலாஜி எல்.கே.ஜின்படத்திற்குப் பிறகு இயக்கியுள்ள படம் மூக்குத்தி அம்மன். இப்படத்தை அவர் சரவணன் என்பவருடம் இணைந்து இயக்கியுள்ளார்.

ஒருகுடும்பம் தங்களுக்கு நடக்கும்  பிரச்சனைகளிலிருந்து விடுபட திருப்பதி சென்று கடவுளை தரிசனம் செய்ய நினைக்கிறார்கள். ஆனால் அதற்கு நிறைய தடைகள் வருகிறது. பின்னர் ஆர்.ஜே.பாலாஜி தனது குல தெய்வமான மூக்குத்தி அம்மனிடம் இந்தக் கோரிக்கையை முன் வைக்கிறார். அவருக்கு கடவுள் நேரில் வந்து அவர்கள் குடும்பத்தில் நிலவும் பிரச்சனைகளைத் தீர்த்து வைத்தாரா இல்லையா என்பதை மிகுந்த சுவாரஸ்யத்துடன் காட்சியமைப்புகளுடன் சொல்லி, வெற்றி பெற்றிருக்கிறார் ஆர்.ஜே.பாலாஜி.

படத்தின் திரைக்
கதை இயக்கத்தில் இயக்குநராக வெற்றி பெற்ற  ஆர் ஜே பாலாஜி காமெடியில் கோட்டை விட்டுள்ளார். ஒரு நடிகையாக தனக்கேற்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள நயன்தாரா வும் சிறப்பாக தன்பங்களிப்பை செய்துள்ளனர். ஆனால் வில்லன் கெட்டப் வேறு படத்தின் ஜாடை தெரிகிறது.
மற்றபடி படம் சூப்பர்.