கங்குவா இரண்டாம் பாகம் வந்தால் அனைவருக்கும் பிடிக்கும்.. படத்தில் நடித்த நடிகர் கருத்து!
சூர்யா நடிப்பில் உருவான கங்குவா திரைப்படம் பெரிய பில்டப்புகளுக்கு மத்தியில் ரிலிஸாகி படுதோல்விப் படமானது. சூர்யாவின் மூன்று ஆண்டுகால உழைப்பு வீணாக்கப்பட்டுள்ளது என அவரின் ரசிகர்கள் கொந்தளிக்கின்றனர். சூர்யா கடைசியாக திரையரங்குகளில் ஒரு வணிக ரீதியான வெற்றிப்படம் கொடுத்து 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது எனப் புள்ளி விவரங்கள் சொல்கின்றன. இந்த படம் மொத்தமாக திரையரங்குகள் மூலமாக 100 கோடி ரூபாய் அளவுக்குக் கூட வசூலிக்கவில்லை என சொல்லப்படுகிறது.
இது ஒருபக்கம் என்றால் படத்தின் மோசமான உருவாக்கத்தால் கடுப்பான ரசிகர்கள் சமூகவலைதளங்களில் படத்தைக் கடுமையாக கேலி செய்தனர். சூர்யா, சிவா மற்றும் ஞானவேல் ராஜா ஆகிய மூவரையும் பல விதங்களில் கேலி செய்து வந்தனர். ஆனால் ஜோதிகா கங்குவா படம் நல்ல படம்தான் எனப் பேசி மேலும் கேலிகளுக்கு வழிவகுத்தார்.
இந்நிலையில் இப்போது கங்குவா படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்த நட்டி படம் குறித்துப் பேசும்போது “கங்குவா படத்தின் முதல் பாகத்தை மட்டும் பார்த்துவிட்டு விமர்சனம் செய்வது சரியல்ல. இரண்டாம் பாகம் வந்தால் அனைவருக்கும் புரியும். அப்போது கங்குவாவின் அருமை தெரியும்” எனக் கூறியுள்ளார். இது கங்குவா படம் பற்றி மேலும் ட்ரோல்கள் உருவாக தற்போது காரணமாக அமைந்துள்ளது.