திங்கள், 30 செப்டம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: வெள்ளி, 6 மே 2016 (11:05 IST)

தேசிய விருதை இளையராஜா ஏன் புறக்கணித்தார்? - பின்னணி தகவல்கள்

தேசிய விருதை இளையராஜா ஏன் புறக்கணித்தார்? - பின்னணி தகவல்கள்

63 -வது தேசிய திரைப்பட விருதுகளை கடந்த செவ்வாய்க்கிழமை குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி வழங்கினார்.


 


சிறந்த பின்னணி இசையமைப்புக்கான தேசிய விருது தாரை தப்பட்டை படத்துக்காக இளையராஜாவுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அவ்விருதை இளையராஜா வாங்காமல் விழாவை புறக்கணித்தார். அதற்கான காரணத்தை அவரே கூறியுள்ளார்.
 
முன்பு சிறந்த இசையமைப்பாளர் என்ற ஒரேயொரு பிரிவில் மட்டுமே விருது வழங்கப்பட்டு வந்தது. தற்போது சிறந்த பின்னணி இசையமைப்பு, சிறந்த இசையமைப்பு (பாடல்கள்) என இரு பிரிவுகளில் விருது வழங்கப்படுகிறது. சிறந்த பின்னணி இசையமைப்பு பிரிவில் இளையராஜாவும், சிறந்த இசையமைப்பு (பாடல்கள்) பிரிவில் ஜெயச்சந்திரனும் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். இந்த இரட்டைமுறைக்கு இளையராஜா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதன் காரணமாகவே அவர் விருது வாங்காமல் விழாவை புறக்கணித்தார்.
 
இது குறித்து அவர் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகத்துக்கு இரண்டு கடிதங்களை எழுதியிருக்கிறார்.
 
அக்கடிதத்தில், "சினிமா இயக்கம், ஒளிப்பதிவு, எடிட்டிங் போன்ற துறையினருக்கு வழங்கப்படுவதுபோல் இசையமைப்புக்கும் ஒரே ஒரு விருது மட்டுமே வழங்கப்பட வேண்டும். ஒரு இசையமைப்பாளரின் திறமையை அவர் ஒரு படத்திற்காக படைத்த பாடல்கள், அமைத்த பின்னணி இசை என எல்லாவற்றையுமே ஒருசேர சீர்தூக்கி பார்த்து விருதுக்கு தேர்வு செய்ய வேண்டும். அதைவிடுத்து பாதி வேலைக்கும் மட்டும் அங்கீகாரம் அளிக்கும் முறை எதற்காகடூ தேசிய விருதுகள் வழங்கப்படுவதற்கான இலக்கும் இதுவல்ல என்றே கருதுகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.