செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 13 அக்டோபர் 2022 (09:23 IST)

“என் பயோபிக்கில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார்…” பிரபல கிரிக்கெட் வீரர் தகவல்!

தமிழகத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் நடராஜனின் பயோபிக்கில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இந்திய அணிக்காக சில போட்டிகளே விளையாடி இருந்தாலும் தமிழக ரசிகர்களின் மனதைக் கவர்ந்த வீரராக இருந்தார் நடராஜன். ஐபிஎல் மூலம் கிடைத்த வெளிச்சத்தில் இந்திய அணிக்குள் நுழைந்த அவர் சிறப்பாக செயல்பட்ட போதும் தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதற்கு அவரின் காயங்களும் முக்கியக் காரணமாக அமைந்தன.

இந்நிலையில் நடராஜனின் கிரிக்கெட் எண்ட்ரியை கொண்டாடிய தமிழக ரசிகர்களுக்கு மற்றொரு மகிழ்ச்சி செய்தியாக இப்போது அவரின் பயோபிக் தமிழில் உருவாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் அதில் நடராஜன் வேடத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. 

இந்த தகவலை தற்போது நடராஜனே உறுதிப்படுத்தியுள்ளார். சமீபத்தில் ஆனந்த விகடன் ஊடகத்துக்கு அவர் அளித்த நேர்காணலில் இதை அவர் உறுதிப்படுத்தியுள்ளார். இதனால் விரைவில் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப் படுகிறது