நீயெல்லாம் ஒரு ஆளா? நமிதாவை வறுத்தெடுக்கும் ஓவியா ஆர்மிகள்
பிக்பாஸ் என்ற ஸ்டார் சிறையில் இருந்து தப்பித்தது எனக்கு நிம்மதியே என்று அந்த வீட்டை விட்டு வெளியேறியபோது கமல்ஹாசனிடம் கூறிய நமீதா, தற்போது இமாச்சல பிரதேசத்தில் ஓய்வு எடுத்து வருகிறார்
இமாச்சல பிரதேசத்தில் உள்ள இமயமலை பகுதியில் சுமார் 12000 அடி உயரத்தில் உள்ள ரோலா கோலி என்ற இடத்தில் உள்ள பனிப்பிரதேசத்தில் உள்ளாராம் நமீதா. இதை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இயற்கை அழகை கண்டு ரசிப்பதாகவும், இங்கு வந்தவுடன் மனம் நிம்மதியாகவும் ரிலாக்ஸ் ஆகவும் இருப்பதாகவும் அவர் பதிவு செய்துள்ளார்.
ஆனால் இந்த பதிவில் ஓவியா ஆர்மியினர் புகுந்து அவரது நிம்மதியை கெடுத்துள்ளனர். நீயெல்லாம் ஒரு ஆளா? ஓவியாவை டார்கெட் பண்ணிய கூட்டத்தில் நீயும் ஒருத்திதானே என்று வறுத்தெடுக்கின்றனர். ஆனால் விவாதம் மேலும் வளரும் என்பதால் யாருக்கும் பதில் கூறாமல் அமைதியாக உள்ளார் நமீதா