புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 14 ஆகஸ்ட் 2021 (15:58 IST)

நமீதாவும் சீரியலுக்கு வருகிறாரா? எந்த சேனலில் தெரியுமா?

நடிகை நமீதா இப்போது போதிய வாய்ப்புகள் இல்லாததால் சின்னத்திரை சீரியலில் நடிக்க உள்ளார்.

2004-ம் ஆண்டு வெளியான விஜயகாந்தின் எங்கள் அண்ணா படத்தின் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமாகி ரசிகர்களால் பேசப்படும் நடிகையாக வலம் வந்தார். அதை தொடர்ந்து தமிழ் சினிமாவில் தொடர் வெற்றிப்படங்களில் நடித்து மார்க்கெட்டைப் பிடித்த நமிதா விஜய்யுடன் அழகிய தமிழ் மகன், அஜித்துடன் பில்லா உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கிக்கொண்டார். இப்படி தமிழக மச்சான்ஸ்களின் மனதில் கூடுகட்டி வாழ்ந்த நமீதா பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மீண்டும் பட்டிதொட்டியெங்கும் பரவலாக பேசப்பட்டார்.

அரசியலிலும் கால்பதித்த அவர் அதிமுக மற்றும் பாஜக ஆகிய கட்சிகளில் பணியாற்றியுள்ளார். ஆனால் பிரகாசமான எதிர்காலம் இல்லாததால் இப்போது சின்னத்திரை சீரியல்களில் நடிக்கலாம் என்ற முடிவை எடுத்துவிட்டார். ஜி தமிழ் சேனலில் ஒளிபரப்பாகும் புதுப்புது அர்த்தங்கள் என்ற சீரியலில் அவர் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக சொல்லப்படுகிறது.