புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By mahendran
Last Updated : திங்கள், 7 ஜூன் 2021 (21:32 IST)

’சூது கவ்வும்’ நலன்குமாரசாமியின் அடுத்த படம் குறித்த தகவல்!

விஜய் சேதுபதி நடித்த சூதுகவ்வும், காதலும் காதலும் கடந்து போகும் உள்ளிட்ட ஒரு சில திரைப்படங்களை இயக்கியவர் இயக்குனர் நலன் குமாரசாமி. இவரது அடுத்த படம் குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருந்தாலும் தற்போது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்ட தகவல் ஒன்று வெளிவந்துள்ளது 
 
இயக்குனர் நலன் குமாரசாமி இயக்கும் அடுத்த படத்தை பிரபல தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தயாரிக்கவுள்ளதகவும், இந்த படத்தில் ஆர்யா நாயகனாக நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது ஏற்கனவே ஆர்யா சார்பட்டா பரம்பரை மற்றும் எனிமி படத்தை முடித்து விட்ட நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு லாக்டவுன் முடிந்தவுடன் உடனடியாக தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
இந்த படத்தில் ஆர்யா இதுவரை நடிக்காத வித்தியாசமான வேடத்தில் நடிக்க உள்ளதாகவும் காமெடியில் கலக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தில் இரண்டு நாயகிகள் என்றும் இரண்டு பேருமே அறிமுக நாயகியாக நடிக்க உள்ளதாகவும் தெரிகிறது. நீண்ட இடைவெளிக்குப்பின் நலன் குமாரசாமி இயக்கும் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது