வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 28 ஜனவரி 2022 (16:43 IST)

அப்படி ஒரு கருத்தை நான் சொல்லவே இல்லை… நாகார்ஜுனா அறிவிப்பு!

நட்சத்திர தம்பதிகளான சமந்தா மற்றும் நாகார்ஜுனா ஆகியோரின் விவாகரத்து செய்தி கடந்த சில மாதங்களாக சமூகவலைதளங்களில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது.

தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவரான நாகர்ஜுனாவின் மகனான நாகசைதன்யாவிற்கும், நடிகை சமந்தாவிற்கு சில ஆண்டுகள் முன்னதாக திருமணம் நடந்தது. இந்நிலையில் கடந்த ஆண்டு இறுதியில் நாகசைதன்யா – சமந்தா தம்பதியினர் தங்கள் விவாகரத்தை அறிவித்தது திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுபற்றி சமந்தா, நாகார்ஜுனாவை குற்றம் சாட்டி பல விவாதங்கள் சர்ச்சைகள் ஊடகங்களில் பேசப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் நாகார்ஜுனா இந்த விவகாரம் பற்றி சமீபத்தில் அளித்த பேட்டியில் மனம்திறந்து பேசியுள்ளார். அதில் ‘எல்லா தந்தையையும் போல நானும் அவரை நினைத்து வருந்தினேன். ஆனால் அவர் என்னை நினைத்து வருந்தினார். நானும் குடும்பமும் அவருக்கு ஆதரவாக இருந்தோம். விவாகரத்து முடிவுக்கு வந்தது சமந்தாதான். அவர்தான் முதலில் விவாகரத்துக்கு விருப்பம் தெரிவித்தார்’ என்று கூறியதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. மேலும் இந்த கருத்து சமூகவலைதளத்திலும் வைரலாக பரவியது.

ஆனால் இந்த கருத்தை இப்போது நாகார்ஜுனா மறுத்துள்ளார். அதில் ‘சமந்தா மற்றும் நாகார்ஜுனா விவகாரம் நான் சொன்னதாக சமூகவலைதளங்களிலும் ஊடகங்களிலும் பரவும் கருத்து முற்றிலும் தவறானது. ஊடக நண்பர்கள் அந்த வதந்தியைப் பரப்ப வேண்டாம்’ எனக் கூறியுள்ளார்.