புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : செவ்வாய், 28 ஏப்ரல் 2020 (09:11 IST)

கணவர் செய்த ஸ்பெஷல் கேக்... வீட்டில் இருந்தபடியே பிறந்தநாள் கொண்டாடும் சமந்தா!

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நாயகியாக வலம் வரும் நடிகை சமந்தா, கடந்த ஆண்டு அக்டோபர் 6-ம் தேதி தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதல் திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவரும் விண்ணைத்தாண்டி வருவாயா தெலுங்கு ரீமேக்கான ஏ மாய சேஸாவே ஷூட்டிங் முதலே காதலித்து வந்தனர்.

8 வருட    காதலுக்குப் பின்னர் திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்த்து வரும் இவர்கள் திருமணத்திற்கு பிறகும் தங்களது கேரியரில் கவனத்தை செலுத்தி அடுத்தடுத்து புது படங்களில் நடித்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது கொரோனா ஊரடங்கு என்பதால் அனைத்து திரைப்பிரபலங்களும் குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு சமூகவலைத்தளங்களில் 24 மணி நேரமும் ஆக்ட்டிவாக இருந்து வருகின்றனர். ஆனால், ஊரடங்கு ஆரம்பித்ததில் இருந்தே சமந்தா அந்த பக்கம் எட்டி கூட பார்க்காமல் கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் இன்ஸ்டாவில் ஆக்ட்டீவாக இருந்து வருகிறார்.

இந்நிலையில் இன்று பிறந்தநாள் கொண்டாடும் சமந்தாவிற்கு கணவர் நாகசைதன்யா வீட்டிலே கேக் செய்து சமந்தாவின் பிறந்தநாளை இந்த லாக்டவுனில் சிம்பிளாக கொண்டாடியுள்ளனர். சமந்தாவிற்கு பிரபலங்கள் , ரசிகர்கள் என பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Family ❤️ .... (no points for guessing what I am praying for )

A post shared by Samantha Akkineni (@samantharuthprabhuoffl) on

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Family ❤️ .... (no points for guessing what I am praying for )

A post shared by Samantha Akkineni (@samantharuthprabhuoffl) on