வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Updated : ஞாயிறு, 20 ஜனவரி 2019 (16:15 IST)

'நாடோடிகள் 2' ரிலீஸ் குறித்து முக்கிய அப்டேட்

2009 ஆம் ஆண்டு சமுத்ரகனி இயக்கத்தில் நடிகர் சசிகுமார், பரணி, அனன்யா, அபிநயா, ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலர்  நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் பெற்ற நாடோடிகள். 
 
இந்த படத்தின் இரண்டாம் பாகம் 'நாடோடிகள் 2' என்ற பெயரில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கப்பட்டது. இதில் சசிகுமாருடன் அதுல்யா, பரணி, எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். இந்த படத்தையும் சமுத்திரகனியே இயக்கியுள்ளார்.
 
இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதமே நிறைவடைந்துவிட்டது. தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் முடிந்துவிட்ட நிலையில் விரைவில் 'நாடோடிகள் 2' ஆடியோ ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இந்த படம் வரும் பிப்ரவரி மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.