செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 5 செப்டம்பர் 2022 (14:48 IST)

இன்று வெளியாகும் நானே வருவேன் முக்கிய அப்டேட்… தயாரிப்பாளர் தாணு அறிவிப்பு!

தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கியுள்ள நானே வருவேன் திரைப்படம் விரைவில் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகிவரும் நானே வருவேன் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது . இந்த படத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்துள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் படத்தின் கதையை தனுஷே எழுதியுள்ளதாக சொல்லப்படுகிறது. தற்போது நடிகராகி விட்ட செல்வராகவன் இந்த படத்திலும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த திரைப்படம் செப்டம்பர் மாதம் ரிலீஸ் ஆகும் என சொல்லப்படுகிறது. இதற்கிடையில் திருச்சிற்றம்பலம் படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றியை அடுத்து நானே வருவேன் படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. இந்நிலையில் அதன் தொலைக்காட்சி உரிமையை சன் தொலைக்காட்சி மிகப்பெரிய தொகைக் கொடுத்து வாங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த படம் செப்டம்பர் 30 ஆம் தேதி ரிலீஸ் ஆக அதிக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இன்று மாலை 6.20 மணிக்கு படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகும் என படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு டிவிட்டரில் அறிவித்துள்ளார்.