திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 7 செப்டம்பர் 2024 (08:15 IST)

மீண்டும் தொடங்கிய மிஷ்கினின் டிரெய்ன் பட ஷூட்டிங்!

பிசாசு 2 படத்தில் இணைந்து பணியாற்றிய மிஷ்கின் மற்றும் விஜய் சேதுபதி இப்போது ஒரு ’டிரைன்’ என்ற முழுநீளப் படத்தில் இணைந்து பணியாற்றுகின்றனர். இந்த படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் நடந்து முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகின்றன.

இந்த படத்துக்காக சென்னையில் உள்ள ஒரு ஸ்டுடியோவில் ட்ரெயின் செட் ஒன்று அமைக்கப்பட்டு அதில் முக்கியமானக் காட்சிகளை படமாக்கினார் இயக்குனர் மிஷ்கின். இந்த படத்துக்கு இயக்குனர் மிஷ்கினே இசையமைக்கிறார். பௌசியா ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார். படத்தில் நாசர் வில்லனாக நடிக்கிறார். மேட்டுப் பாளையத்தில் இருந்து சென்னை வரும் டிரெயினில் நடக்கும் சம்பவங்களே திரைக்கதையாக அமைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்துவிட்டதாக சொல்லப்பட்ட நிலையில் தற்போது சில நாட்கள் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் இதன் ஷூட்டிங்கை நடத்தியுள்ளார் இயக்குனர் மிஷ்கின். அதில் கே எஸ் ரவிகுமார் மற்றும் ஸ்ருதிஹாசன் உள்ளிட்டோர் நடித்துள்ளதாக சொல்லப்படுகிறது. முன்னதாக இந்த படத்தில் ஒரு பாடலை மட்டும் பாடவந்த ஸ்ருதிஹாசன், பாவனா நடிக்க இருந்த ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க தேர்வாகியுள்ளதாக சொல்லப்படுகிறது.