வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Abimukatheesh
Last Updated : திங்கள், 20 மார்ச் 2017 (18:16 IST)

இளையராஜா செய்தது சரிதான்: மிஷ்கின் பாராட்டு

காப்புரிமை தொடர்பாக எஸ்.பி.பாலசுப்பிரமணியனுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி விழிப்புணர்வு ஏற்படுத்திய இளையராஜாவுக்கு நன்றி என இயக்குநர் மிஷ்கின் தெரிவித்துள்ளார்.


 

 
தான் இசையமைத்த பாடல்களை தனது அனுமதி இல்லாமல் பாடியதற்கு எஸ்.பி.பாலசுப்பிரமணியனுக்கு இளையராஜா வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார். இதையடுத்து இவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டது. 
 
இதுகுறித்து இயக்குநர் மிஷ்கின் கூறியதாவது:-
 
காப்புரிமையின் முக்கியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திய இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு முதலில் என்னுடைய பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன். இளையராஜாவின் பாடலின் வெற்றிக்கு அவருடைய இசை மட்டுமே முழுமையான காரணம். படைப்பாளிக்கே படைப்பின் மீதான முழு உரிமையும் உண்டு, என தெரிவித்துள்ளார்.