என்னுடைய இதயப்பூர்வமான நன்றி- ரஜினிகாந்த்
சூப்பர் ரஜினிகாந்த் தன்னை வாழ்த்திய மற்றும் பாராட்டியவர்களுக்கு நன்றி தெரிவித்து டுவீட் பதிவிட்டுள்ளார்.
ரஜினிகாந்த் தனக்கு வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி டுவீட் தெரிவித்துள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு நேற்று முன் தினம்( 24-10-21) இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டு உள்ளது. இதனால் ரஜினிக்கு பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில் ரஜினிக்கு பிரதமர் மோடி, பாரதிராஜா சச்சின் உள்ளிட்ட பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், ரஜினிகாந்த் தனக்கு வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி டுவீட் தெரிவித்துள்ளார்.
அதில், என்னை நெஞ்சார வாழ்த்திய அரசியல் தலைவர்களுக்கும், அரசு அதிகாரிகளுக்கும், அனைத்துத் துறை நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும், மக்களுக்கும் என்னுடைய இதயப்பூர்வமான நன்றி எனத் தெரிவித்துள்ளார்.