திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : புதன், 17 ஆகஸ்ட் 2022 (14:14 IST)

பிறந்த நாளை சிறந்த நாளாக்கியது உங்கள் வாழ்த்து - கமலுக்கு நன்றி கூறிய ஷங்கர்!

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் ஷங்கர் தனது பிறந்த நாளில் வாழ்த்து தெரிவித்த கமல் ஹாசனுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் ‘ஜென்டில்மேனாக’ தொடங்கிய இவரது பயணம், சினிமா ரசிகர்களையே ‘காதலனாக்கி’ அவர் மீதான கலையின்’ ஜீன்ஸாகவும்’, பிரமாண்டத்தின் ‘முதல்வனாகவும் ‘கொண்டாடி வருகின்றனர்.

‘பாய்ஸ் ‘படத்தில் புதுமுகங்களை அறிமுகம் செய்து அப்படத்தை சூப்பர் ஹிட் ஆக்கியதுடன்,  ‘அ ந் நியனின்’ அதிரடி காட்டி, ‘ சிவாஜி’யில் சூப்பர் ஸ்டாருடன் கூட்டணி அமைத்து இந்தியர்களை குதூகளிக்கச் செய்தவர்,  மீண்டும் ‘எந்திரனாக’ உலகைப் புருவம்  உயர்த்த சயின்ஸ்பிக்சனில் இறங்கினார். ஒரு மாறுதலுக்கு ரீமேக்கில் களமிறங்கி, விஜய்யுடன் கை கோர்த்து ‘நண்பனாகி’  சினிமாவில் புதிய சென்சேசனை உருவாக்கியவர்.

இரண்டாம் முறையாக’ ஐ’ யில் விக்ரமுடன் கூட்டணி வைத்து சினிமாவில் பிரமாண்டத்திற்கு எடுத்துக்காட்டாய் நின்றார். அதன்பின், சூப்பர் ஸ்டாருடன் 3 வது முறையாக 2.0 ல் இணைந்து, தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு  உயர்த்திய  சாதனைக்காரர் இயக்குனர் ஷங்கர்.

தற்போது, தெலுங்கில் ராம்சரணுடன் இணைந்து ஆர்.சி 15 படத்தை இயக்கி வரும் ஷங்கர் இப்படம் முடிந்த பின், விரைவில் இந்தியன் 2 படத்தை இயக்கவுள்ளார். ..

இப்படத்தின் ஹீரோ கமல் ஹாசன், ஷங்கரின் பிறந்த நாளை முன்னிட்டு தனது டுவிட்டரில், இந்தியன்’ என்பதில் பெருமிதம் கொள்வோம்; இணைந்தே இன்னும் பல சாதனைகள் செய்வோம்! பிரமாண்ட திரைப்படங்களால் இந்தியாவையே திரும்பிப் பார்க்கச் செய்த இயக்குனர் @shankarshanmugh அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். எனப் பதிவிட்டிருந்தார்.

இதற்கு, இயக்குனர் ஷங்கர், நிச்சயமாக ‘இந்தியரே’.
என் பிறந்தநாளை
சிறந்த நாளாக்கியது
உங்கள் வாழ்த்து
மிக்க நன்றி @ikamalhaasan சார் என நன்றி தெரிவித்துள்ளார்.