செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 23 டிசம்பர் 2023 (09:59 IST)

சிவகார்த்திகேயன் – இமான் விவகாரத்தில் ஆதாரத்தைக் கண்ணால் பார்த்தேன் – பிரபல பத்திரிக்கையாளர் தகவல்!

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான டி இமான் சில தினங்களுக்கு முன்னர் அளித்த ஒரு  நேர்காணலில் நடிகர் சிவகார்த்திகேயன் மிகப்பெரிய துரோகம் ஒன்றை தனக்கு செய்துள்ளதாக கூறி பரபரப்பைக் கிளப்பினார். அதில் “இந்த ஜென்மத்தில் சிவகார்த்திகேயனும் நானும் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு இல்லை. அடுத்த ஜென்மத்தில் அவர் ஹீரோவாக இருந்து நான் இசையமைப்பாளராக இருந்தால் பார்க்கலாம்.

அவர் எனக்கு மிகப்பெரிய துரோகத்தை செய்துவிட்டார். இது பற்றி நான் கேட்ட போது அவர் சொன்ன பதிலை இங்கு சொல்லவே முடியாது. அவர் செய்ததை சொன்னால் குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கும். அதனால் என்னால் சொல்லமுடியாது” என ஆதங்கத்தோடு கூறியிருந்தார்.

இமானின் இந்த பேட்டி வைரல் ஆனதை அடுத்து சிவகார்த்திகேயன் கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறார். அதனால் கடந்த சில மாதங்களாக பொதுவெளியில் எந்த நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ளாமல் இருந்து வருகிறார்.

இந்நிலையில் இமான் –சிவகார்த்திகேயன் விவகாரம் பற்றி முன்பே பலமுறை பேசியிருந்தார் பிரபல சினிமா பத்திரிக்கையாளர் வலைப்பேச்சு பிஸ்மி. இப்போது இந்த விவகாரம் பற்றி மீண்டும் பேசியுள்ள அவர் ”இந்த விவகாரத்தை நான்தான் முதலில் பொதுவெளியில் பேசினேன். இமான் சொல்வது பொய் என்று வைத்துக்கொண்டால் கூட சிவகார்த்திகேயன் இதுவரை அதை மறுக்கவில்லை. இந்த விவகாரத்தில் ஆதாரத்தை நான் என் கண்களாலேயே பார்த்தேன்” என பல அதிர்ச்சி தகவல்களைக் கூறியுள்ளார்.