வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 24 நவம்பர் 2020 (16:39 IST)

டிஸ்னிக்காக அனிமேஷன் படம் இயக்கப்போகும் விஜய் பட இயக்குனர்! செம்ம ஐடியா!!

ஏ ஆர் முருகதாஸ் டிஸ்னி தயாரிப்பு நிறுவனத்துக்காக அனிமேஷன் படம் ஒன்றை இயக்க உள்ளார்.

மாஸ்டர் படத்துக்குப் பின்னர் விஜய் நடிக்கும் விஜய் 65 படத்தை இயக்க இருந்த ஏ ஆர் முருகதாஸ் அந்த படத்தில் இருந்து விலகிவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதற்கு சன் பிக்சர்ஸ் கொடுப்பதாக சொன்ன சம்பளம் அவருக்குக் கட்டுப்படி ஆகாதததுதான் காரணம் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இப்போது முருகதாஸ் டிஸ்னி நிறுவனத்துக்காக ஒரு அனிமேஷன் திரைப்படம் ஒன்றை இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்காக தனது உதவி இயக்குனர்களுடன் கதை விவாதத்தில் அவர் ஈடுபட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த திரைப்படம் இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளிலும் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளதாம்.