பிரபல தமிழ் நடிகருக்கு தான் விளையாடிய பேட்டை பரிசாக அளித்த தோனி
அண்மை காலமாக தமிழில் ரிலீஸ் ஆகும் பெரும்பாலான படங்களில் யோகி பாபு இல்லாத படங்களே இல்லை என்கிற அளவிற்கு தன் இடத்தை யாரும் தட்டி பறிக்காத வகையில் தன் நடிப்பு திறமையை ஒவ்வொரு படத்திலும் அதிகரித்து காட்டுகிறார். அந்த வகையில் அவர் நடித்த தர்மபிரபு மற்றும் மண்டேலா ஆகிய படங்கள் வெற்றியடைந்ததை அடுத்து இப்போது மேலும் சில படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.
யோகி பாபுவுக்கு சினிமா தவிர, கிரிக்கெட் மீதும் மிகப்பெரிய அளவில் ஆர்வம் இருந்து வருகிறது. அடிக்கடி சமூகவலைதளங்களில் தன்னுடைய கிரிக்கெட் வீடியோக்களைப் பகிர்ந்து வருகிறார். இந்நிலையில் தற்போது தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அவர் ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.
அதில் “தோனி தான் விளையாடிய பேட்டை பரிசாக அளித்துள்ளதாகவும், அதற்காக நன்றி தெரிவித்தும்” பேசியுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.