செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 29 ஜூலை 2024 (08:52 IST)

பிரபாஸ் படத்தில் மிருனாள் தாக்கூர்… மீண்டும் இணையும் சீதாராமம் கூட்டணி!

துல்கர் சல்மான் நடிப்பில் உருவான சீதாராமம் திரைப்படம் மூலமாக பாலிவுட் நடிகையான மிருனாள் தாக்கூர் தென்னிந்திய ரசிகர்களுக்கு அறிமுகம் ஆனார். அந்த படத்தின் பிளாக்பஸ்டர் ஹிட்டால், அந்த படத்தின் இயக்குனர் ஹனு ராகவபுடி கவனிக்கப்படும் இயக்குனர் ஆனார்.

இந்நிலையில் ஹனு ராகவபுடி அடுத்து இயக்கும் படத்தில் பிரபாஸ் கதாநாயகனாக நடிக்க உள்ளார். இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படம் ஒரு வரலாற்று ஆக்‌ஷன் படமாக உருவாகிறது. படத்துக்கு விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார். இதுவரை மூன்று பாடல்கள் தயாராகிவுள்ளதாக ஹனு ராகவபுடி தெரிவித்துள்ளார்.

இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க பாகிஸ்தானைச் சேர்ந்த முன்னணி நடிகையான சஜல் அலி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இவர் ஸ்ரீதேவி நடித்த மாம் படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த படத்தில் மற்றொரு கதாநாயகியாக மிருனாள் தாக்கூர் நடிக்க உள்ளாராம். இதன் மூலம் சீதாராமம் கூட்டணி மீண்டும் இணைய உள்ளது குறிப்பிடத்தக்கது.