வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 17 மே 2019 (10:16 IST)

ரிமோட் இருந்தா ஓட்டி விட்ருப்பன் ? – மிஸ்டர் லோக்கல் டிவிட்டர் விமர்சனம் !

மிஸ்டர் லோக்கல் படம் இன்று வெளியாகியுள்ள நிலையில் டிவிட்டர் வாசிகள் அதனை விமர்சனம் செய்து வருகின்றனர்.

சீமராஜா படத்தை அடுத்து சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவரவுள்ள படம் மிஸ்டர் லோக்கல். இந்தப் படத்தை ராஜேஷ் இயக்கியுள்ளார். ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும் ராதிகா, சதிஷ், தம்பி ராமையா, எரும சாணி ஹரிஜா என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இப்படத்துக்கு ஹிப் ஹாப் தமிழா இசையமைத்துள்ளார். இன்று இந்தப்படம் வெளியாகி முதல்நாள் முதல் காட்சி முடிந்துள்ள நிலையில் ரசிகர்கள் தங்கள் பார்வையில் படம் எப்படி உள்ளத் உ என விமர்சனம் செய்துவருகின்றனர்.

ரசிகர்களின் ஒருவரி கமெண்ட் :-
  • படம் நல்லா இருக்கு.. ஆனா எதிர்பார்த்த அளவு இல்ல…
  • நயந்தாரா ஆக்டீங் சூப்பர்
  • காமெடி வொர்க் அவுட் ஆகல
  • ரோபோ ஷங்கர் & சதீஷ் ஏமாத்திட்டாங்க
  • சந்தானம் இல்லாம ராஜேஷ் படம் இல்ல
  • ரிமோட் இருந்தா ஓட்டி விட்ருப்பன்
  • ஒரு தடவப் பாக்கலாம்
  • அட ஒன்னுமே இல்ல விடுங்க
  • மொக்க ப்ரோ
  • சாங்ஸும் ஒன்னுமில்ல.. டைலாக்கும் இல்ல…
  • சிவகார்த்திகேயன் நல்ல ஸ்க்ரிப்டா ச்சூஸ் பண்ணனும்
  • ஸ்டோரி எங்கேஜ் பண்ணல