சிவகாமி'யை மிஸ் செய்த ஸ்ரீதேவிக்கு மீண்டும் சான்ஸ் கொடுத்த ராஜமெளலி
எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கிய 'பாகுபலி' மற்றும் 'பாகுபலி 2' படங்களில் பிரபாஸ், அனுஷ்கா கதாபாத்திரங்களை அடுத்து புகழ் பெற்ற கதாபாத்திரம் ரம்யாகிருஷ்ணன் நடித்த 'சிவகாமி' பாத்திரம்தான். இந்த கேரக்டருக்கு முதலில் ஸ்ரீதேவியிடம் பேசினார் ராஜமெளலி
ஆனால் ஸ்ரீதேவி கோடிக்கணக்கில் சம்பளம் கேட்டதாகவும், இன்னும் சில கண்டிஷன்களாலும் ஸ்ரீதேவியை தவிர்த்த ராஜமெளலி பின்னர் அந்த கேரக்டருக்கு ரம்யாகிருஷ்ணனை தேர்வு செய்தார்.
மேலும் இந்த விஷயம் குறித்து கடந்த சில நாட்கள் முன்னர் பத்திரிகைகள் மூலம் ராஜமெளலி மற்றும் ஸ்ரீதேவி மோதிக்கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி தன்னுடைய அடுத்த படத்தின் நாயகியாக ஸ்ரீதேவியை தேர்வு செய்துள்ளதாகவும், இந்த படத்தின் நாயகனாக மோகன்லால் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த படம் குறித்த அறிவிப்பு இன்னும் ஒருசில நாட்களில் வெளிவரும் என தெரிகிறது