வியாழன், 5 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வெள்ளி, 26 ஜூலை 2019 (15:08 IST)

அப்பாவானார் அகில உலக சூப்பர் ஸ்டார்!

ஆரம்பத்தில் மிர்ச்சி ரேடியோ ஸ்டேஷனில் ஆர்.ஜே வாக தனது கெரியரை துவங்கிய சிவா பின்னர் சினிமாவில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த அவருக்கு 'சென்னை 600028' படத்தின் மூலம் ஹீரோவாக வாய்ப்பு கொடுத்தார் வெங்கட் பிரபு. 


 
முதல் படத்திலே ரசிகர்களின் பரீட்சியமானவராக தென்பட்ட சிவா பின்னர்  'தமிழ்ப்படம்', ''கலகலப்பு', 'தில்லுமுல்லு', 'உள்பட பல திரைப்படங்களில் ஹீரோவாக நடித்து பிரபலமானார்.  தான் நடிக்கும் அத்தனை படங்களிலேயும் கலகலப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்த சிவாவுக்கு அகில உலக சூப்பர்  பட்டத்தை சூட்டி அழகு பார்த்தனர் அவரது ரசிகர்கள். 
 
இந்நிலையில் தற்போது சொல்லவரும் தகவலென்னவென்றால்,  பேட்மிண்டன் வீராங்கனையான ப்ரியா என்பவரை திருமணம் செய்து கொண்ட சிவாவிற்கு நேற்று சென்னை அப்போலோ மருத்துவமனையில் அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது. குட்டி அகில உலக சூப்பர் ஸ்டாருக்கு அகஸ்தியா என்று பெயர் வைத்துள்ளனர். சிவா தந்தையான விஷயம் அறிந்த ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் அவருக்கு தொடர்ந்து தங்களுடைய வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.