பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மைக்கேல்… ரசிகர்களை திருப்திப் படுத்தியதா?
சந்தீப் கிஷன் நடிப்பில் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கிய மைக்கேல் திரைப்படம் நேற்று ரிலீஸ் ஆனது.
சந்தீப் கிஷான் ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தில் விஜய் சேதுபதி நெகட்டிவ் கேரக்டரில் நடித்துள்ளார் என்பதும் மேலும் முக்கிய கேரக்டரில் கௌதம் மேனன் வரலட்சுமி உள்ளிட்ட பல நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ரஞ்சித் ஜெயகொடி இயக்கத்தில் உருவான இந்த படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது. அதிரடி ஆக்சன் காட்சிகள் கொண்ட விறுவிறுப்பான திரைக்கதை கொண்ட இந்த படம் நேற்று வெளியானது.
டிரைலர் மீதிருந்த எதிர்பார்ப்புக் காரணமாக இந்த படத்துக்கு நேற்று நல்ல கூட்டம் இருந்தது. ஆனால் படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களின் பொறுமையை சோதித்துள்ளது. பலரும் கேஜிஎப் போல எடுக்க நினைத்து சொதப்பி வைத்துள்ளதாக சமூகவலைதளங்களில் ஆதங்கத்தைப் பகிர்ந்து வருகின்றனர்.