மும்பையில் ‘மெர்சல்’ பாட்டு ரெக்கார்டிங்
விஜய் நடித்துவரும் ‘மெர்சல்’ படத்தில் இடம்பெறும் ஒரு பாடல், மும்பையில் ரெக்கார்டிங் செய்யப்பட்டுள்ளது.
அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துவரும் படம் ‘மெர்சல்’. விஜய் மூன்று வேடங்களில் நடிக்கும் இதில், நித்யா மேனன், காஜல் அகர்வால், சமந்தா என மூன்று ஹீரோயின்கள் நடிக்கின்றனர். தேனாண்டாள் ஸ்டுடியோ லிமிடெட் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இதன் பாடல் வெளியீட்டு விழா, ஆகஸ்ட் மாதம் 20ஆம் தேதி மிகப் பிரமாண்டமாக நடைபெற உள்ளது.
எனவே, பாடல்களை ரெக்கார்டிங் செய்யும் வேலையை பரபரப்பாகச் செய்து வருகிறார் ஏ.ஆர்.ரஹ்மான். சமீபத்தில், ஸ்ரேயா கோஷல் மற்றும் கைலாஷ் கெர் இணைந்து பாடிய மெலடி பாடல், மும்பை ஸ்டுடியோவில் ரெக்கார்ட் செய்யப்பட்டது. மொத்தம் 5 பாடல்கள் படத்தில் இடம்பெற்றுள்ளன. 5 பாடல்களையுமே விவேக் எழுதியுள்ளார்.