புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Murugan
Last Modified: புதன், 9 ஆகஸ்ட் 2017 (14:14 IST)

ஆளப்போறான் தமிழன்...மெர்சல் பட போஸ்டர் - அரசியலுக்கு அடி போடுகிறாரா விஜய்?

அட்லியின் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் மெர்சல் படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது.


 

 
ரஜினிகாந்தை போலவே, நடிகர் விஜயும் அரசியலுக்கு வருவார் என்கிற பேச்சு பல வருடங்களாகவே இருக்கிறது. விஜய் மக்கள் இயக்கம் என்கிற பெயரில் அவரின் ரசிகர்கள் செயல்பட்டு வருகிறார்கள். அவர்களை விஜயின் தந்தையும், இயக்குனருமான எஸ்.ஏ. சந்திரசேகர் வழிநடத்தி வருவதாக தெரிகிறது.
 
திரைப்படங்கள் மூலமாகவும், அரசியல் தலைவர்கள் அவ்வப்போது சந்தித்தும், அரசியலில் தனக்கு ஈடுபாடு இருப்பதுபோலவே விஜய் காட்டிக்கொண்டார். ஆனால், அவரது தலைவா பட ரிலீசின் போது, ஏற்பட்ட பிரச்சனைக்கு பின் கொஞ்சம் அடக்கியே வாசித்தார். தற்போது கமல்ஹாசன் அரசியலுக்கு வருகிறார் என பேசத் தொடங்கி விட்டார்கள்.
 
இந்நிலையில், மெர்சல் படத்தில் ஒரு பாடல் ஆடியோவை வருகிற 10ம் தேதி  வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. அதற்கான போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது. அதில் ‘ஆளப்போறான் தமிழன்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 
இதன் முலம் அரசியலுக்கு வரும் தனது விருப்பத்தையே அவர் காட்டியிருக்கிறார் எனக் கூறப்படுகிறது.