திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Updated : திங்கள், 3 ஜூலை 2017 (12:55 IST)

தல அஜித்தை சந்தித்து புகைப்படம் வெளியிட்ட நடிகை கஸ்தூரி!

நடிகை கஸ்தூரி சமூக வலைதளங்களில் பரபரப்பாக தனது கருத்துக்களை தெரிவித்து வருகிறார். நடிகை கஸ்தூரி அரசியல் தலைவர்கள், நடிகர்கள் என யாரையும் விட்டுவைக்காமல் தன்னுடைய கருத்தால் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறார்.

 
நடிகை கஸ்தூரி ட்விட்டரில் ரொம்பவே ஆக்டிவாக தொடர்ந்து தனது கருத்துகளை தெரிவிப்பதோடு, சமூகத்தில் நடக்கும் பிரச்சனைகள் குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்து வருகிறார். ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்தும் வருகிறார். கஸ்தூரியின் கருத்துக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுக்களும் வருகின்றன. அதே நேரத்தில் விமர்சனங்களும்  வருகின்றன.
 
தற்போது நடிகை கஸ்தூரி, நடிகர் தல அஜித்துடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டு,  நடிகர் அஜித் விவேகம் படப்பிடிப்பு முடிந்து தற்போது சென்னையில் உள்ளார் என அஜித் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் நடிகை கஸ்தூரி.