மாஸ்டர் மாற்றங்கள் வரும் Faster.... புதிய சாதனை படைத்த பாடல்கள்!
புதிய சாதனை படைத்த மாஸ்டர் பட பாடல்கள்...
தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய ’மாஸ்டர்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்து விட்டது. இன்னும் ஒரு சில நாட்களில் இந்த படம் சென்சாருக்கு செல்லும் என்றும் வரும் ஏப்ரல் 9ஆம் தேதி இந்த படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் கொரோனா வைரஸ் பீதி காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் மாஸ்டர் பாடல்கள் புதிய சாதனையை படைத்துள்ளதாக படக்குழு ட்விட்டரில் தெரிவித்துள்ளனர். அதாவது இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் 100 மில்லியனை பார்வையாளர்களை கடந்துள்ளது என தெரிவித்துள்ள படக்குழு They call me மாஸ்டர் , மாற்றங்கள் வரும் Faster! தொடர்ச்சியான ஆதரவு நண்பா மிக்க நன்றி வீட்டிலேயே இருங்கள், பாதுகாப்பாக இருங்கள் என்று தெரிவித்துள்ளனர்!