மாஸ்டர் ரிலீஸ் தேதியில் மாற்றம் இல்லை: படக்குழுவினர் தகவல்
தளபதி விஜய் நடித்து முடித்துள்ள மாஸ்டர் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் கிட்டத்தட்ட நிறைவடையும் நிலையில் உள்ளது
இந்த நிலையில் இன்னும் ஒரு சில நாட்களில் இந்த படம் சென்சாருக்கு செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரபரப்பு காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது
மேலும் மார்ச் 31-ஆம் தேதி வரை தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளும் மூடப்படும் என்று அரசு அறிவித்துள்ளதால் திட்டமிட்டப்படி ஏப்ரல் 9ஆம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆகுமா என்ற சந்தேகம் அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது
இந்த நிலையில் படக்குழுவினர் இது குறித்து கூறிய போது ’இப்போதைக்கு மாஸ்டர் ரிலீஸ் தேதி ஏப்ரல் 9ஆம் தேதி தான் மாஸ்டர் திரைப்படம் நிச்சயம் முடங்கிக் கிடக்கும் பொதுமக்களை வெளியில் வரவழைக்கும் என்று நம்புகிறோம் என்றும் கூறினார்கள். மேலும் ஏப்ரல் 9 ஆம் தேதிக்குள் கொரோனா வைரஸ் குறித்த பரபரப்பு அடங்கி விடும் என்று எதிர்பார்க்கிறோம் என்றும், இப்போதைக்கு ரிலீஸ் தேதியில் மாற்றமில்லை ஏப்ரல் 30ஆம் தேதி தான் மாஸ்டர் படத்தின் ரிலீஸ் தேதி என்று கூறி உள்ளனர்
இருப்பினும் மார்ச் 31ம் தேதிக்கு பிறகு இந்த படத்தின் ரிலீஸ் தேதி உறுதி செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது