செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 15 செப்டம்பர் 2020 (18:37 IST)

’’மாஸ்டர்’’ பட இயக்குநரின் அடுத்த பட அறிவிப்பு ! ரசிகர்கள் குஷி

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான  லோகேஷ் கனகராஜ், கைதி, மாஸ்டர் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார். தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய ’மாஸ்டர்’ திரைப்படம் ஓடிடியில் வெளியாகும் என்று கடந்த சில மாதங்களாகவே வதந்திகள் வெளியாகி வருகிறது.

இந்நிலையில் லோகேச்ஷ் கனராஜின் அடுத்த பட அறிவிப்புகள் எப்போது அவரது ஆவலுடன் எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்த நிலையில்,  தனது அடுத்த பட அறிவிப்புகள் குறித்து நாளை மாலை தெரிவிப்பதாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதனால் ரசிகர்கள் மேலும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.