புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Modified: சனி, 20 ஜூன் 2020 (22:44 IST)

நவம்பரில் திருமணம் …புது பங்களா கனவு… அதற்குள் தற்கொலை..விசாரணையில் புதுத்தகவல் !

கடந்த ஞாயிற்றுக் கிழமை அன்று நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டார். அவரது மரணம் பாலிவுட்டில்  மட்டுமல்ல இந்தியாவையே பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதுகுறித்து போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.இந்நிலையில் சுஷாந்த் சிங்கின் நெருங்கிய தோழியிடன் போலீஸார் 8 மணி நேரம் விசாரணை செய்துள்ளனர்.

வியாழக்கிழமை சுஷாந்தின் பிஆர். மேலாளர்  ராதிகா நிஹாலானி, முன்னாள் மேலாளர் ஸ்ருதி மோடி ஆகியோருடன் வாக்குமூலங்களைப் பெற்றுள்ளனர் போலீஸார்.

மேலும், சுஷாந்தின் நெருங்கிய தோழி ரியா சக்கரவர்த்தியை பந்த்ரா காவல்நிலையத்திற்கு அழைத்த  போலீஸார் சுமார் 10 மணிநேரம் விசாரித்துள்ளனர்.

அப்போது அவர் கூறியுள்ளதாவது, லாக்டவுன் நேரத்தில் நானும் சுஷாதும் லிவிங் டுகெதராக பாந்தாரவில் உள்ள வீட்டில் இருந்தோம். வரும் நவம்பர் மாதம் திருமணம் செய்துகொள்ள இருந்தோம். ஆனால் எங்களுக்குள் சண்டை வரவே நான் என் வீட்டுக்குக் கிளம்பிவிட்டேன். ஆனாலும் அவருடன் போனில் பேசிக் கொண்டிருந்தேன். ஒரு புதிய பங்களா வாங்கி அதில் குடிபுகும் எண்ணம் இருந்தது எனவும் கூறியுள்ளார்.