செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: சனி, 14 ஜனவரி 2023 (07:54 IST)

நீங்க நீங்களா இருந்ததற்கு நன்றி - அஜித்துக்கு நன்றி கூறிய மஞ்சு வாரியர்!

தமிழ் சினிமாவுக்கு நயன்தாரா என்றால் மலையாள சினிமாவுக்கு மஞ்சு வாரியார். இவர் லேடி சூப்பர் ஸ்டார் என மலையாள சினிமா ரசிகர்களால் அழைக்கப்படுகிறார்.
அசுரன் படத்தின் மூலமாக தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான இவர் தொடர்ந்து அஜித்தின் துணிவு படத்தில் நடித்திருந்தார். 
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இவரது நடிப்பு பாராட்டுக்கு உள்ளானது. இந்நிலையில் இப்படத்தில் அஜித்துடன் நடித்தது குறித்து பதிவிட்டுள்ள மஞ்சு வாரியார், "அஜித் சார் நீங்கள் நீங்களாகவே இருந்ததற்கு நன்றி" என சமூக வலைதளத்தில் அஜித்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படமொன்றை பதிவிட்டுள்ளார். இது இணையத்தில் வைரலாகி வருகிறது.