96 பட வாய்ப்பை தவறவிட்ட மஞ்சுவாரியர் - த்ரிஷா நடிப்பை கண்டு மன வருத்தம்!

Papiksha| Last Updated: வெள்ளி, 18 அக்டோபர் 2019 (18:12 IST)
மலையாள மகாநாடி மஞ்சு வாரியார் தமிழில் தனுஷின் அசுரன் படத்தின் மூலம் அறிமுகமாகி முதல் படத்திலேயே தனது அசாத்தியமான நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் ரசிகர்களையும் கவர்ந்துவிட்டார். 

 
இந்த படத்தில் நடித்த அனுபவத்தை பற்றி பேட்டி ஒன்றில் கூறிய மஞ்சுவாரியர், அசுரன் படத்தில் நடிக்க தனுஷ்  தான் தன்னை சிபாரிசு செய்து நடிக்க வைத்தார் என கூறினார். மேலும் விஜய் சேதுபதி - த்ரிஷா நடிப்பில் வெளிவந்த 96 படத்தில் நடிக்க வேண்டியது தான். ஆனால், அப்படத்தின் இயக்குனர் பிரேம் குமாரால் என்னை தொடர்புகொள்ள முடியவில்லை என்ற காரணத்தால் பின்னர் திரிஷாவை ஒப்பந்தம் செய்தார்களாம். இந்த தகவல் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. 
 
இயக்குனர் என்னிடம் நேரடியாக கேட்டிருந்தால் நிச்சயம் இப்படத்தில் நடித்திருப்பேன். இருந்தாலும் ஜானு கதாபாத்திரத்தில் த்ரிஷா அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். அந்த வேடத்தில் அவரை தவிர வேறு யாராலும் நடித்திருக்க முடியுமா என்று தெரியவில்லை. என்று கூறி த்ரிஷாவின் நடிப்பை பாராட்டினார். இருந்தாலும் அந்த படத்தில் நடிக்க முடியாமல் போனதற்கு அவரது உள் மனதில் சிறு வருத்தம் இருக்கிறது.


இதில் மேலும் படிக்கவும் :