செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 17 ஏப்ரல் 2021 (17:25 IST)

உங்கள் மரணம் எங்கள் இதயத்தை நொறுக்குகிறது… மம்மூட்டி அஞ்சலி!

தமிழ் சினிமாவின் முன்னணிக் கலைஞர்களில் ஒருவரான விவேக் மறைவுக்கு மலையாள நடிகர் மம்மூட்டி இரங்கல் தெரிவித்துள்ளார்.

மாரடைப்புக் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் விவேக் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். அவரின் மரணம் அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினருக்கு பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து பலரும் அவரது இல்லத்துக்கு வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

வர முடியாதவர்கள் சமூகவலைதளங்களின் மூலமாக இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மலையாள நடிகர் மம்மூட்டி தன் டிவீட்டில் ‘RIP விவேக். தன் வாழ்நாள் முழுவதும் நம்மை சிரிக்க வைத்த மனிதன். உங்கள் இழப்பு எங்கள் இதயத்தை நொறுக்குகிறது.’ எனக் கூறியுள்ளார்.